நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 12

எனக்கு போன் மேல் போன் போட்டு நான் ஜெனியிடம் என்ன பேசினேன் என்ற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான் சிராஜ். ஜெனியிடம் இருந்தது திரைப்பட தயாரிப்பு சம்பந்தமான முடிவுக்கு கடந்த ஒருவாரமாக காத்திருந்தான் சிராஜ். அவளிடமிருந்து பதில் ஏதும் வராததால் இவற்றிற்கெல்லாம் காரணம் நான் தான் என பொருமிக்  கொண்டிருந்தான். சிராஜின் காத்திருப்பு ஒரு வாரம் இரண்டு வாரம் என சென்றது. ஜெனியிடமிருந்தோ அல்லது அவள் கணவனிடமிருந்தோ இருந்தோ எந்த பதிலும் இல்லாததால், முன்னாள் கல்வி … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 11

எனக்கு தெரியும். இந்த வயதில் அதுவும் முன் பின் அறிமுகம் இல்லாத யாரோ ஒருவன், முதல் சந்திப்பிலேயே இப்படி பேசுவது ஒரு மூன்றாம் தர ரசிகன் ஒரு நடிகையை கண்ட மாத்திரத்தில் “ஐ லவ் யூ” என்று கூட்டத்திலிருந்து கத்துவதற்கு சமம். சற்று நேர அதிர்ச்சிக்கு பின் சுதாரித்துக் கொண்டாள் ஜெனி. “என்னோட ஹார்ட் கோர் ரசிகர்  நீங்க! தேங்க்யூ சோ மச் ஃபார் த லவ்! ஐ ஹேவ் சோ மெனி ஹார்ட் கோர் ஃபேன்ஸ் … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 10

கதைப்படி அதில் வரும் கதாநாயகி கொழுக் மொழுக்கென்று இருக்க வேண்டும். ஆனால் ஜெனியோ இந்த நாற்பது வயதிலும் சிக் என்று ஒடிசலாக இருப்பவள். சிராஜ் எதிர்பார்த்த நடிகைகளில் இருவர் இயக்குனருக்கு நட்சத்திர அந்தஸ்து இல்லை என நிராகரித்து விட்டனர். மூன்றாவது இடத்தில் இருந்த ஒரு மலையாள நடிகைக்கு கதை பிடித்திருந்தது. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தான் கால்ஷீட் கிடைக்கும் என்ற நிலை.  கடைசியாக சிராஜ் தேடிப் போய் பார்த்தவள்தான் ஜெனி. எடுத்து எடுப்பிலேயே ஓகே சொல்லிவிட்டார் … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 9

“நீ நடிகன் ஆகிவிடு, இயக்குனர் வேலை எல்லாம் உனக்கு சரி வராது. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பள்ளி நாட்களில் எனக்கு அறிவுரை வழங்கிய சின்னப்பராஜ், தற்போது திரையுலகில் ஒரு இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தான். அவனது திரையுலக பெயர் சிராஜ். சின்னப்பராஜ் என்ற பெயரை சுருக்கி சிராஜ் என்று வைத்துக் கொண்டது போல் இருந்தது. ஆரம்ப நாட்களில் சிறுசிறு குறும்படங்களாக எடுத்துக் கொண்டிருந்தவன், நரிக்குறவர் சமுதாயத்தை மையமாக வைத்து வணிக ரீதியான படம் ஒன்றை எடுத்திருந்தான். … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 8

ஜெயந்தி மருத்துவமனையில் இருந்து கச்சிபௌலிக்கு காரில் போய்க் கொண்டிருந்தோம். கடந்த மூன்று நாட்களாக அம்மாவும் அப்பாவும் என்னுடன் மருத்துவமனையிலேயே தங்கி இருந்தார்கள். கார் ஹைதராபாத்தின் போக்குவரத்து நெரிசலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருக்க, அப்பா எதுவுமே நடக்காதது போல் நகரத்தை வேடிக்கை பார்ப்பதில் பிஸியாக இருந்தார். தொலைக்காட்சிக்கு ரிமோட் கண்ட்ரோல் இருப்பது போல, தன்னுடைய எமோஷன்களுக்கும் ரிமோட் கண்ட்ரோல் வைத்திருப்பவர் அப்பா. அவரால் எப்பேற்பட்ட அசாதாரண நிலையிலும் ஒரு ஜோக் அடித்து சிரிக்க முடியும். குதிகாலில் இருந்த … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 7

“நான் ஜெனியோட பிரண்ட். அவள் தான் இன்று என்னை வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தாள்” என்றேன். நான் நடிகை ஜெனியை அவள் இவள் என்று உரிமையோடு பேசுவதை பார்த்து “சார் நீங்க மேடமோட பிரண்டுன்னு சொல்றீங்க, அப்ப நீங்க அவங்களுக்கு கால் பண்ணிட்டு வந்திருக்கலாம் இல்ல?” என்றான்.  அவன் கேட்பது நியாயம்தான். ஆனால் அவள் மொபைல் எண்ணை வாங்குவதற்கு முன்பு அவருடைய தோழிகள் அவசர அவசரமாக அவளை கூட்டிச் சென்று விட்டார்கள். “அவங்களோட போன் நம்பர் என்கிட்ட இல்ல, … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 6

திரையில் தோன்றுவதை போன்ற அதே பளபளக்கும் கேசம். வெள்ளை வெளேரென்ற தேகம். அழகான நெற்றி. எடுப்பான மூக்கு. ரோஜா இதழ் போன்ற உதடு. அதன் கீழே இருக்கும் மச்சம்.  “இத்தனை வருடங்களாக என் கனவில் மட்டுமே வந்திருந்த கனவு கன்னியின் முன்பா நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன்” என என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். இது கனவல்ல நிஜம் தான்.  திரும்பிப் பார்த்தேன் பவன் தற்போது அந்த இரண்டு பெண்களுடன் கண்டபடி ஆடிக் கொண்டிருந்தான். எங்கள் இருவரை … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 5

நைட் கிளப் அரங்கின் விதிமுறைப்படி பெண்கள் ஆண் துணை இல்லாமல் வரலாம். ஆனால் அப்படி பெண் துணை இல்லாமல் வரும் ஆணை அனுமதிக்க மாட்டார்கள். இந்த விதிமுறை எல்லாம் நன்றாக தெரிந்திருந்தும் பவன் என்னை அங்கு அழைத்துச் சென்றிருந்தான். பவனின் திட்டப்படி நாங்கள் அரங்கின் நுழைவாயில் அருகே காத்திருக்க தொடங்கினோம். நான் அங்கே உள்ளே நுழையும் ஜோடிகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். சில ஜோடிகள் தனியாகவும் சிலர் நண்பர்களுடனும் வந்திருந்தனர். ஐந்து பெண் நண்பர்களுடன் வந்திருந்த ஒருவனை … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 4

அன்று வழக்கம் போல் அலுவலகம் முடிந்ததும் அலுவலகத்தின் வெளியே அவளுக்காக காத்திருந்தேன். நண்பர்களோடு வெளியே வந்தவள், நேராக போய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டாள். என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவளது இயந்திரத்தனமான நடத்தையால் நான் வெகுவாக குழம்பிப் போனேன். “சரி நாளை நேரில்  பேசிக் கொள்ளலாம்” என இருந்த எனக்கு மறுநாளும் அதிர்ச்சியாய் இருந்தது. அவளை என்னால் நெருங்க கூட முடியாத படி பார்வையால் நெருப்பை அள்ளி கொட்டினாள். அவள் என் மீது கோபமாக இருக்கிறாள் என்றால் … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 3

“தம்பி இங்க வா! நான் ரொம்ப நேரமா ஒன்ன பாத்துகினு இருக்கேன். நீ இந்த முனைக்கும் கடசிக்கும் நடையா நடந்துட்டு இருக்கியே! இன்னாதான் வோணும் வொனக்கு?” எனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முன்வந்தார் ஆட்டோக்கார அண்ணன் ஒருவர். பாக்கெட் டைரியிலிருந்த முகவரியை காண்பித்து, ஒரு மணி நேரமாக இந்த கோவிந்தசாமி தெருவில் அலைந்தும் என்னால் 23/A எண்ணுள்ள வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்றேன். “தம்பி! ஒன்னால ஊட்ட கண்டுபிடிக்க முடியலன்னா யாராண்டையாவது கேக்கணும்! இப்படி … Read more